பள்ளி மாணவர்களிடம் ஒரு நபர் செய்த மிக மோசமான செயல்!

பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரபல கபுவா 20க்கும் மேற்பட்ட சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக காலி நீதவான் நீதிமன்றில் நேற்று (23-08-2022) தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி, பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், உனவட்டுன, மாதரம்பவில் உள்ள தேவாலயம் ஒன்றின் பிரபல பாதிரியார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், சந்தேகநபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர் மற்றும் அவரது கூட்டாளிகள் என கூறப்படும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி காலி நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் கபுவாவிற்கு எதிராக மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

09 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட 20க்கும் மேற்பட்ட சிறுவர்களை கபுவா துஷ்பிரயோகம் செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Previous articleயாழ்ப்பாணம் நல்லூர் கந்தனின் தேர் ஊர்வலம் பக்தர்களால் வெகு சிறப்பாக நடைபெற்றது!
Next articleதேசிய அடையாள அட்டை தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன!