பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் போது கவர்ச்சிகரமான ஆடைகளை அணிந்திருந்தால், பாலியல் பலாத்கார வழக்கு செல்லாது!

பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் போது கவர்ச்சிகரமான ஆடைகளை அணிந்திருந்தால், அவரது முறைப்பாடு செல்லுபடியாகாது என தெரிவித்து சந்தேகநபருக்கு பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவின் கோழிக்கோடு செஷன்ஸ் நீதிமன்றமே இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எழுத்தாளரும், கலாச்சார ஆர்வலருமான சிவிக் சந்திரனுக்கு முன்ஜாமீன் வழங்கிய கோழிக்கோடு மாவட்ட அமர்வு நீதிமன்றம், புகார்தாரர் அணிந்திருந்த உடை பாலியல் உணர்வை தூண்டும் வகையில் இருந்ததால் புகாரில் எந்த தகுதியும் இல்லை என்று தீர்ப்பளித்தது.

பிப்ரவரி 18, 2020 அன்று நந்தி கடற்கரையில் ஒரு வெறிச்சோடிய இடத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக புகார்தாரர் புகார் அளித்துள்ளார்.

ஏப்ரல் 17, 2021 அன்று புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிவிக் சந்திரன் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக மற்றொரு எழுத்தாளர் புகார் அளித்திருந்தார்.

சம்பவத்தன்று புகார்தாரரின் புகைப்படங்களை இணைத்து ஜாமீன் கோரி சிவிக் சந்திரன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனை அவதானித்த நீதிபதி, “சிவிக் சந்திரன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த படங்களில் இருந்து, புகார்தாரரின் ஆடைக் கட்டுப்பாடு பாலியலை தூண்டும் வகையில் இருந்தது தெளிவாகிறது. குற்றஞ்சாட்டப்பட்ட 74 வயது ஊனமுற்ற நபர், புகார்தாரரை வலுக்கட்டாயமாக தனது மடியில் வைத்திருந்ததைக் குறிப்பிட்டு சிவிக் சந்திரனுக்கு ஜாமீன் வழங்கியது.

இந்த உத்தரவுக்கு இந்திய தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார். பாலியல் துன்புறுத்தல் வழக்கில் புகார்தாரரின் உடைகள் குறித்து நீதிமன்றத்தின் அவதானிப்புகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று அவர் கூறினார். அத்தகைய உத்தரவின் தொலைநோக்கு விளைவுகளை நீதிமன்றம் கவனிக்கவில்லை என்று அவர் ட்விட்டர் மூலம் பதிலளித்தார்.

Previous articleகனடாவில் தமிழர் ஒருவர் காவல்துறையினரால் தேடப்பட்டு ஆபத்தானவராக அறிவிக்கப்பட்டுள்ளார்!
Next articleஇளம் பெண்ணை கடத்தி திருமணம் செய்த பெண்!