யாழ். நல்லூர் கோவிலில் அனைவரின் கவனத்தை ஈர்த்த மணல் சிற்பங்கள்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோத்ஸவம் இடம்பெற்று வரும் நிலையில், ஆலய முன்றலில் தினமும் உருவாக்கப்படும் மணல் சிற்பங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது பற்றிய கூடுதல் தகவல்கள் வருமாறு:

யாழ்ப்பாணம் வேலணையைச் சேர்ந்த சுப்பிரமணியம் சுகுமார் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த மணல் சிற்பங்கள் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

இந்த மணல் சிற்பங்களை உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

அரசு அதிகாரியான அவர், தனது மகிழ்ச்சிக்காகவும், பார்க்கும் மற்றவர்களின் மகிழ்ச்சிக்காகவும் இந்த மணல் சிற்பங்களை வடிவமைத்து வருவதாக தெரிவித்தார்.

இவர் கடந்த காலங்களில் நடைபெற்ற நல்லூர் மஹோத்ஸவங்களின் போது மணல் சிற்பங்களை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.