300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிக தடை! அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!

இன்று முதல் மறு அறிவித்தல் வரை 300க்கும் மேற்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் இதனை அறிவித்துள்ளார்.

இதற்காக சாக்லேட், வாசனை திரவியங்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உடைகள், உள்ளாடைகள், கைக்கடிகாரங்கள், எலக்ட்ரானிக் கெட்டில்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பை கையாள்வதற்காக இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Previous articleவிரைவில் பாஸ்போர்ட் பெற சிறப்பு வசதி!
Next articleயாழில் வெளிநாட்டு சிகிரெட்டுகளுடன் விசேட அதிரடிப்படையினரிடம் சிக்கிய நபர்!