யாழில் வெளிநாட்டு சிகிரெட்டுகளுடன் விசேட அதிரடிப்படையினரிடம் சிக்கிய நபர்!

யாழ் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காரைநகர் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளை விற்பனை செய்த காரைநகரை சேர்ந்த ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 1200 சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபர் உள்ளூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Previous article300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிக தடை! அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!
Next articleகோழி இறைச்சி விலையில் திடீர் மாற்றம்!