கோழி இறைச்சி விலையில் திடீர் மாற்றம்!

கோழி இறைச்சியின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதுடன் சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.ரத்நாயக்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை பிரச்னையால், முட்டை உற்பத்தியாளர்கள் கோழிகளை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 700 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தையில் முட்டையின் விலை மாறுபட்டு வருவதால், முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்வதற்கான வர்த்தமானியை அரசு சமீபத்தில் வெளியிட்டது.

Previous articleயாழில் வெளிநாட்டு சிகிரெட்டுகளுடன் விசேட அதிரடிப்படையினரிடம் சிக்கிய நபர்!
Next articleயாழில் இலங்கை வங்கி ஊழியர்கள் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் : வெளியான காரணம்!