வவுனியாவில் தாலிக்கொடியை அறுத்துச் சென்ற இராணுவ வீரர் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு!

வவுனியாவில் தாலிக்கொடியை அறுத்துவிட்டு தப்பிச் சென்ற இராணுவ சிப்பாய் பொதுமக்களிடம் சிக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வருமாறு:

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணின் கழுத்தில் சிவில் உடையில் இருந்த இராணுவ சிப்பாய் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் தாலிக்கொடியை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கடத்தப்பட்டவர் சிவில் உடையில் இருந்த இராணுவ சிப்பாய் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பொதுமக்களால் கனகராயன்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா கனகராங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் குடிபோதையில் பயணிகள் பேருந்தை ஓட்டிச் சென்ற சாரதி கைது!
Next articleமட்டக்களப்பில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிபோன பாடசாலை மாணவன் பலி : வெளியான காரணம்!