யாழ். நல்லூரில் பக்தர் போல பாசாங்கு செய்து திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்!

நல்லூரில் பக்தர் போல் வேடமணிந்து மற்ற பக்தர்களிடம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த வெளி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் கோவிலுக்குள் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் கோவிலுக்குள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த நபர் பக்தர்களிடம் இருந்து திருடப்பட்ட வங்கி அட்டையை பயன்படுத்தி கோவிலுக்கு அருகில் உள்ள புடவை விற்பனை நிலையத்தில் ஆடைகளை வாங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் பின்னர், கண்காணிப்பு கமரா உதவியுடன் குறித்த நபரை பொலிஸார் துரிதமாக கைது செய்ததுடன், யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஎரிபொருள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்!
Next articleஇலங்கைக்கு திடீரென மிகபெரும் ஆப்பு வைத்த சீனா!