இரண்டு நாட்களில் நாட்டை வந்தடையவுள்ள டீசல் கப்பல்!

அடுத்த இரண்டு நாட்களில் மற்றுமொரு டீசல் கப்பல் நாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 40,000 மெட்ரிக் தொன் ஆட்டோ டீசல் கப்பல் மாத்திரமே நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, 92 ஒக்டேன் பெற்றோல் கப்பலும் எதிர்வரும் 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளது.

கப்பலில் 33,000 மெட்ரிக் டன் எண்ணெய் இருப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நாட்டை வந்தடைந்த 30,000 மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் கப்பலில் இருந்து தரையிறங்கும் நடவடிக்கைகள் இன்று (25) இடம்பெறவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Previous articleஇலங்கைக்கு திடீரென மிகபெரும் ஆப்பு வைத்த சீனா!
Next articleகுடும்பப் பெண் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.