குடும்பப் பெண் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

வெளிமடை – சப்புகடே பகுதியில் பெண் காணாமல் போனமை தொடர்பில் அவரது மகள் வெளிமடை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பெண்ணின் சடலம் போர்வையால் சுற்றி, அப்பகுதியில் உள்ள ஹோட்டல் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் வீசப்பட்டது.

சடலத்தின் மீது பாரிய வெட்டுக்காயங்கள் காணப்பட்டன.

புரங்வெல பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடைய பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி பெண் வேறொருவருடன் ஹோட்டல் நடத்தி வருவதும், அந்த நபருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால், அந்த நபர் பெண்ணை வெட்டிக் கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் தலவாகலை பகுதியை சேர்ந்த 37 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇரண்டு நாட்களில் நாட்டை வந்தடையவுள்ள டீசல் கப்பல்!
Next articleகுழந்தைகளின் பசியை போக்க மூன்று கிலோ அரிசியை திருடிய தந்தைக்கு நடந்த சோகம்!