சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நாளை விடுதலை!

சிறைச்சாலையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாளை (26ஆம் திகதி) அல்லது நாளை மறுதினம் சனிக்கிழமை (29ஆம் திகதி) விடுதலை செய்யப்படுவார் என்பதில் உறுதியாக உள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எனது மற்றும் மனுஷாவின் கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என அமைச்சர் ஹரீன் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகுழந்தைகளின் பசியை போக்க மூன்று கிலோ அரிசியை திருடிய தந்தைக்கு நடந்த சோகம்!
Next articleபிரதமர் பதவியை ஏற்கத் தயாராகும் : கோட்டாபய வெளியான அறிவிப்பு!