10 வயது சிறுமிக்கு ரூ.100 கொடுத்து சீரழிக்க முயற்சி: பாய், தலைணையுடன் தோட்டத்திற்கு சென்றதால் சிக்கிய 63 வயது முதியவர்!

பேருவளை, கலவில கந்த பிரதேசத்தில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சந்தேகநபர் ஒருவரை பேருவளை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் புதன்கிழமை கைது செய்துள்ளது.

63 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபர் காய்கறி வியாபாரி என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரின் வீட்டில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் உள்ள வீடொன்றில் சிறுமி வசிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் இதற்கு முன்னர் சிறுமிக்கு இனிப்புகளை வாங்குவதற்கு சிறிய தொகையை கொடுத்துள்ளார். புதன்கிழமையன்றும், சிறுமியை தனது கொல்லைப்புற மறைவிடத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு ரூ.100 தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளார்.

சந்தேக நபர் ஒரு பாய் மற்றும் தலையணையுடன் தனது வீட்டு முற்றத்தை நோக்கி செல்வதை அயலவர் கவனித்தார். அவருடன் சிறுமியும் செல்வதை அவதானித்தார்.

உடனடியாக அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்தார். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து முதியவரை மீட்டனர். சிறுமியை மீட்டு பேருவளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார். பேருவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleமார்பு பகுதி அடிக்கடி வலிக்கிறதா? அலட்சியம் வேண்டாம்! இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்!
Next articleஅதிக பருமனென பிரிந்து சென்ற காதலி: கட்டழகனாக மாறி பதிலடி கொடுத்த இளைஞன்!