நல்லூர் கந்தனின் தீர்த்தத் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவின் தீர்த்தத் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இன்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் வேலன் வள்ளி தெய்வானை சமேதராக வழிபட்டார்.

வௌர்ளி எலி வாகனத்தில் பிள்ளையாரும், மயில் வாகனத்தில் முருகப்பெருமானும் வலம் வந்தனர். நாட்டின்
பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து வழிபட்டனர்.

வெள்ளிக்கிழமை (26) மாலை கொடியேற்றம், சனிக்கிழமை (27) மாலை பூங்காவனம், ஞாயிற்றுக்கிழமை (28) வைரவர் உற்சவத்துடன் இருபத்தைந்து நாட்கள் நடைபெறும் மஹாகோத்ஸவம் நிறைவுபெறவுள்ளது.

Previous articleயாழ் நல்லூரில் கையில் குழந்தைகள் வைத்து ஊதிபத்தி விற்றவர்கள் கைது : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
Next articleயாழ்.மானிப்பாய் பகுதியில் வாக்குமூலம் வழங்கியவர் வீட்டில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!