யாழ்.மானிப்பாய் பகுதியில் வாக்குமூலம் வழங்கியவர் வீட்டில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றிற்குள் புகுந்த வாள்வெட்டு குழுவினரின் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய நபரின் வீடு தாக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மானிப்பாய் பகுதியில் கடையொன்றை உடைத்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் இளைஞரை அழைத்து வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

புதன்கிழமை பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய இளைஞரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியையும் உடைத்துள்ளது.

மேலும் மோட்டார் சைக்கிளை உடைத்து விட்டு ஓடினர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous articleநல்லூர் கந்தனின் தீர்த்தத் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது!
Next articleஇன்று யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இராணுவத் தளபதி ஜெனரல் விக்கும் லியனகே!