யாழில் பெருமளவான மிதிவெடிகள் மீட்பு விசாரணைகள் தீவிரம்!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கராத்தி பகுதியில் நேற்று மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

சங்கரத்தை பகுதியில் உள்ள வீடொன்றின் காணி நேற்று காலை வீட்டின் உரிமையாளரால் சுத்திகரிக்கப்பட்டது.

இதன் போது சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு பொருட்கள் காணப்பட்டதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து, வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் சந்தேகத்திற்கிடமான பொருட்களை அவதானித்தபோது அவை கைக்குண்டுகள் என கண்டறியப்பட்டுள்ளது.

அதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸார் வெடிபொருட்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleகிளிநொச்சியில் கப் வாகனத்தால் பலியான குடும்பஸ்தர்!
Next articleயாழில் ஆசிரியை ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அவரது வீட்டில் சடலமாக மீட்பு !