யாழில் ஆசிரியை ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அவரது வீட்டில் சடலமாக மீட்பு !

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் தனியாக வசித்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக வீட்டில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தின் ஓய்வுபெற்ற ஆசிரியை எஸ்.செல்வராணி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் வீட்டுக்குள் சென்று பார்த்த போது சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கழுத்து அறுக்கப்பட்டதாக கூறப்படுவதால் திருட்டு நோக்கத்தில் ஆசிரியை கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

எனினும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous articleயாழில் பெருமளவான மிதிவெடிகள் மீட்பு விசாரணைகள் தீவிரம்!
Next articleயாழில் இராணுவத் தளபதியினால் திறந்து வைக்கப்பட்ட நல்லிணக்க மையம்!