யாழில் இராணுவத் தளபதியினால் திறந்து வைக்கப்பட்ட நல்லிணக்க மையம்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கை இராணுவத் தளபதி யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.

அந்தவகையில் யாழ்ப்பாணம் பலாலி சந்தியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க மத்திய நிலையம் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை இராணுவத்தின் பங்களிப்புடன் ஆரோக்கியமான நோயற்ற சந்ததியை உருவாக்குவதற்காக இந்த நல்லிணக்க நிலையம் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி யாழ் மாவட்டத்திற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் ஆசிரியை ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அவரது வீட்டில் சடலமாக மீட்பு !
Next articleரஞ்சன் ராமநாயக்க சற்று முன் விடுதலை!