பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த இளைஞனுக்கு நேரந்த துயரம்!

பேருந்தில் பலாங்கொடைக்குச் சென்று கொண்டிருந்த 22 வயதுடைய நிஸ்ஸங்க குமார சிறி என்ற சிறுவனே பேருந்தில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

ரஸ்கல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ருபாபில கம பிரதேசத்தில் இருந்து பலாங்கொடை நோக்கி பயணித்த போது பஸ்ஸில் இருந்து எச்சில் துப்புவதற்காக இறங்கியதாக கூறப்படுகிறது.

அதன்பின், வீட்டுக்குச் சென்ற இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous articleரஞ்சன் ராமநாயக்க சற்று முன் விடுதலை!
Next articleயாழில் பேருந்துக்காக காத்திருந்த இளைஞர் மீது வாள்வெட்டு!