யாழ்.மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம்!

யாழ் குடாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அடுத்த சில நாட்களுக்குள் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படும்.

சபுஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் நிறைவடைந்து மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வரும் நிலையில்,

எதிர்வரும் சில நாட்களில் யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளது.

இவ்வாறு விநியோகிக்கப்படும் மண்ணெண்ணெய் மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleயாழில் பெண் வேடமிட்டு வீட்டுக்குள் புகுந்து கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது!
Next articleயாழில் மீனவர்களின் வாடிகளுக்கு தீ வைப்பு!