மின்வெட்டு தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் திடீரென செயலிழந்த முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் நேற்று இரவு முதல் இயங்க ஆரம்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி 300 மெகாவாட் மின்சாரம் தேசிய மின்வட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக அடுத்த வாரம் முதல் மின்வெட்டு நேரத்தில் மாற்றம் ஏற்படக் கூடும் என்றும், மின்வெட்டு நேரம் குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் இலங்கை மின்சார சபை தரவுகள் மூலம் அறியமுடிகிறது.

கடந்த 15ஆம் திகதி நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் திடீரென செயலிழந்தது.

இதன் பின்னர் அதுவரை 1 மணித்தியாலமாக காணப்பட்ட தினசரி மின்வெட்டு 3 மணிநேரமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் பிச்சைக்காரன் வேடத்தில் ஐஸ் போதைப்பொருள் விற்ற நபர் கைது!
Next articleசொத்துக்காக கூகிளின் உதவியுடன் தாயை கொன்ற மகள்: தேனீர் மணம் மாறியதால் தப்பித்த தந்தை!