யாழில் எலிக் காய்ச்சலால் சிகிச்சை பெற்று வந்த ராணுவ சிப்பாய் பலி!

யாழ்ப்பாணம் கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றிய 38 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி காய்ச்சல் காரணமாக கீரிமலை இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த இராணுவ வீரர்,

பின்னர் பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து 25ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் அவர் உயிரிழந்துள்ளார்.

Previous articleசொத்துக்காக கூகிளின் உதவியுடன் தாயை கொன்ற மகள்: தேனீர் மணம் மாறியதால் தப்பித்த தந்தை!
Next articleகணவன் – மனைவி இடையே தகராறு! அநியாயமாக கன்றுக்குட்டியை அடித்துக் கொன்ற கும்பல்!