பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்த முக்கிய எச்சரிக்கை !

இலங்கையில் அண்மைக்காலமாக பல பிரதேசங்களில் பெண் வேடமணிந்து கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனடிப்படையில் நேற்று முன்தினம் (26-08-2022) புடவை அணிந்து பெண் போன்று நீண்ட முடி அணிந்து பொருட்களை திருடிய நபரை களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரி ராஜித குருசிங்க சந்தேக நபரை கைது செய்ததுடன் திருடப்பட்ட அரிசி குக்கர், தண்ணீர் மோட்டார், பித்தளை பானை, பீங்கான் கோப்பைகள் உட்பட பல பொருட்களை மீட்டுள்ளனர்.

பெண் வேடமணிந்து களுத்துறையில் உள்ள அயலவர்களின் வீடுகளுக்குள் பிரவேசித்ததாகவும், அயலவர்களுக்கு சந்தேகம் ஏற்படவில்லை எனவும் சந்தேகநபரின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக பயன்படுத்தப்பட்ட 7 புடவைகளை கண்டுபிடித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் வேடமிட்டு யாரேனும் நடமாடுவதைக் கண்டால் உஷாராக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Previous articleபாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து சங்கத்தின் முக்கிய அறிவிப்பு!
Next articleயாழில் இராணுவத்தினரால் மூடப்பட்டிருந்த வீதி திறப்பு !