ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட காதலனுக்காக தன்னுயிரை தியாகம் செய்த காதலி!

காதல் பிரிவை தாங்க முடியாத இளம்பெண் ஒருவர் தென்னிலங்கையில் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நில்வலா கங்கையின் ஆறாவது கிளையான கிராமரா ஓயாவில் குதித்து 19 வயது யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் மாத்தறை, பிடபெதர பிரதேசத்தில் உள்ள நில்வலா கங்கையில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞனின் காதலி இவ்வாறானதொரு சோகமான முடிவை எடுத்துள்ளார்.

நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை, பிடபெதர மற்றும் நில்வலா கங்கை ஆகிய பகுதிகளில் நீராடச் சென்று காணாமல் போன நான்கு இளைஞர்களில் மூவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்ணின் காதலனை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Previous articleயாழில் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களின் திருவிழாக்கள் ஆரம்பம்!
Next articleசற்று முன்னர் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!