உயிரிழந்த சகோதரனுக்காக அன்னதானம் வழங்க சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்!

கண்டி மாவட்டம் – ஹசலக்க, கங்கேயாய, பஹே எல பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று (28-08-2022) காலை இடம்பெற்றுள்ளது.

ஹசலக, கங்கேயாய, பஹே எல குடியைச் சேர்ந்த அனுத்தரா இந்துனில் என்ற 16 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இன்று காலை தெரிவிக்கப்பட்டது.

கடந்த 14 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த தனது சகோதரனுக்காக அன்னதானம் வழங்குவதற்காக பெற்றோருடன் விஹாரைக்கு சென்று கொண்டிருந்த போது காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

பின்னர், ஹசலக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளார்.

Previous articleசற்று முன்னர் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!
Next articleயாழ்.மாவட்டத்தில் கணிதப் பிரிவில் மத்திய கல்லூரி மாணவன் முதலிடம்!