171,497 பேருக்கு பல்கலைக்கழக அனுமதி : வெளியான அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 171,497 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மொத்த மாணவர்களில் 62.9 வீதமானவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், 37 பாடசாலை பரீட்சார்த்திகள் உட்பட 49 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

Previous articleயாழ்.மாவட்டத்தில் கணிதப் பிரிவில் மத்திய கல்லூரி மாணவன் முதலிடம்!
Next articleயாழில் எவருடைய உதவிகளுமில்லாமல் கல்வியில் முன்னுக்கு வந்த பெண்மணி!