யாழில் வசிக்கும் நபர் ஒருவரின் கடவுச்சீட்டில் இலங்கைக்குள் நுழைய முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்ற பங்களாதேஷ் பிரஜை ஒருவர் நேற்று காலை குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

45 வயதான சந்தேக நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போதிலும் அதே விமானத்தில் நாடு கடத்தப்பட்டார்.

சந்தேக நபர் குவைத்தில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளார்.

சந்தேக நபர் இலங்கை கடவுச்சீட்டை போலி புகைப்படத்துடன் சமர்ப்பித்துள்ளார், பின்னர் அது போலியானது என அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.

குவைத்தில் உள்ள பங்களாதேஷ் தூதரகம் வழங்கிய அடையாள அட்டையை அவரது பொதிகளில் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பங்களாதேஷ் பிரஜை குவைத்தில் உள்ள தரகர் ஊடாக இலங்கை கடவுச்சீட்டை பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்த கடவுச்சீட்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவருடையது என குடிவரவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

எனினும், சந்தேக நபர் அவர் வந்த அதே விமானத்தில் குவைத்துக்கு நாடு கடத்தப்பட்டார்.

Previous articleயாழில் எவருடைய உதவிகளுமில்லாமல் கல்வியில் முன்னுக்கு வந்த பெண்மணி!
Next articleஇலங்கையில் அதிசயமாய் காய்த்த தென்னை மரம்!