நாட்டில் கையடக்க தொலைப்பேசியின் விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்!

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகள் எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டதன் பின்னர், அவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்தார்.

ஒரு சில பெரிய வியாபாரிகளுக்கு மட்டுமே பலன் கிடைக்கும் என்று குறிப்பிட்டார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இந்த நிலை தொடர்பில் பாவனையாளர்களிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார்.

Previous articleஇலங்கையில் அதிசயமாய் காய்த்த தென்னை மரம்!
Next articleயாழிற்கு விமான சேவையை ஆரம்பிக்கும் பிரபல இந்தியா விமான சேவை நிறுவனம்!