யாழில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது !

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் விற்பனைக்காக தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று கோண்டாவில் புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் பெறப்பட்ட 75,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயற்படும் பொலிஸ் மா அதிபர் நிக்கோலஸ் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்யும் பிரதான சந்தேக நபரான 27 வயதுடைய நபர் நீண்ட தேடுதலின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleவெளிநாடு செல்ல காத்திருக்கும் அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
Next articleசட்டவிரோதமாக தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற நால்வர் கைது!