யாழில் போதைப் பொருளை நுகர்ந்த 2 பெண்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடொன்றிற்குள் போதைப்பொருள் உட்கொண்ட 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 கிராம் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

யாழ்ப்பாணத்தின் புறக்கோட்டையில் உள்ள பாழடைந்த வீடொன்றில் போதைப்பொருள் உட்கொள்வதாக யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த 2 பெண்களும் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பாளர் சாய்மேனன் தலைமையிலான குழுவினர் அவர்களை கைது செய்தனர்.

28 மற்றும் 29 வயதுடைய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Previous articleஉயர்தர பரீட்சையில் சித்தியடைந்த 9ஆம் தர மாணவன் !
Next articleஅண்ணன் உயிரிழந்து 14வது நாளில் தாயின் கண்முன்னால் உயிரிழந்த 17 வயது சிறுமி..!