மின் வேலியில் சிக்கி பரிதாபமாக பலியான யானை !.

நவகத்தேகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட தம்மன்னவெட்டிய கிராமத்தில் காட்டு யானை ஒன்று மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக நவகத்தேகம வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த காட்டு யானை பல நாட்களாக கிராமத்தில் சுற்றித் திரிந்ததாக கிராம மக்கள் தெரிவித்ததாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த காட்டு யானைக்கு 25 வயது இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனியார் வீடொன்றில் இருந்து, யானை வேலியில் பொருத்தப்பட்டிருந்த உயர் அழுத்த மின்சாரம் காரணமாக யானை உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி வீட்டின் உரிமையாளர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாகவும், தனது தாய் அதே வீட்டில் வசித்து வருவதாகவும், இதனால் யானை வேலிக்கு உயர் அழுத்த மின்சாரம் பொருத்தப்பட்டமை தொடர்பில் தனக்குத் தெரியாது எனவும் விசாரணையின் போது 75 வயதுடைய தாய் தெரிவித்துள்ளார். .

இது தொடர்பில், நவகத்தேகம பொலிஸார் மற்றும் நவகத்தேகம வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.