கனடாவில் வீடு வாங்க காத்திருப்பவருக்கு மகிழ்ச்சி செய்தி !

கனடாவில் வீடு வாங்க காத்திருப்போருக்கு அந்நாட்டின் ரீடி வங்கி (டிடி வங்கி) மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

கனடாவில் வீடுகளின் விலைகள் வரும் 2023 ஆம் ஆண்டில் குறையும் என்று வங்கி கணித்துள்ளது, அதே நேரத்தில் சமீபத்திய ஆண்டுகளில் வீட்டு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

இதன் விலை சுமார் 20 முதல் 25 சதவீதம் வரை குறையும் என வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

ரீடி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வீட்டு விலைகள் ஐந்து சதவீதம் குறைந்துள்ளதாக கனேடிய ரியல் எஸ்டேட் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

கோவிட் தொற்றுநோய்களின் போது கனடாவில் வீட்டு விலைகள் அசாதாரணமான விகிதத்தில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.