எரிபொருள் விநியுாகம் தொடர்பில் வெளியான விஷேட அறிவித்தல்!

நாட்டில் நிலவும் விநியோக தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த நான்கு நாட்களில் பாரிய எரிபொருள் இருப்புக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன சேமிப்பு முனையத்தினால் நாளாந்தம் 4000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 3000 மெற்றிக் தொன் பெற்றோல் விநியோகம் செய்யப்படவுள்ளது.

இதேவேளை, இன்று இரவு கப்பலில் இருந்து 35,000 மெற்றிக் தொன் 92 தர பெற்றோல் தரையிறக்கப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleகாதலிக்க மறுத்ததால் சிறுமியை எரித்த இளைஞன்!
Next articleகாதல் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட 19 வயதுடைய இளைஞன்!