காதல் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட 19 வயதுடைய இளைஞன்!

19 வயதுடைய இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காதல் தோல்வி காரணமாக குறித்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தகவல் கிடைத்ததும் மஸ்கெலியா பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை அவதானித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மரண விசாரணை அதிகாரி மற்றும் சடலம் கிளங்கன் வைத்திய சாலையில் சட்ட வைத்திய அதிகாரியால் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

சடலம் தற்போது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Previous articleஎரிபொருள் விநியுாகம் தொடர்பில் வெளியான விஷேட அறிவித்தல்!
Next articleஇன்று விக்கினங்களை தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி; தப்பித்தவறி கூட பூஜையில் இதை பயன் படுத்தாதீங்க!