யாழில் 3 ஏ எதிர்ப்பார்த்த மாணவி தற்கொலை முயற்சி!! மயிரிழையில் காப்பாற்றப்பட்டார்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் விஞ்ஞானம் கற்கும் மாணவி ஒருவர் நேற்று தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையில் 3 பாடங்களிலும் ஏ பெறுவார் என பாடசாலை சமூகம் எதிர்பார்த்தது.

ஆனால் அவரது முடிவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதனால் பள்ளியும் அதிர்ச்சி அடைந்ததாகவும், பலர் மாணவியை தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் மேற்படி மாணவி தனது வீட்டில் உள்ள கிணற்றில் குதித்ததாகவும், கிணற்றில் வீழ்வதாக தாய் அலறியதும் அயலவர்கள் கிணற்றுக்குள் விரைந்து வந்து மாணவியை காப்பாற்றியதாகவும் தெரியவருகிறது. கிணற்றில் தவறி விழுந்து மீட்கப்பட்ட மாணவி தலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Previous articleயாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள சில வர்த்தகர்களின் பொறுப்பற்ற செயல், பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை வெள்ளம்!
Next articleயாழில் மீட்கப்பட்ட வயோதிபரின் சடலம் !