முல்லைத்தீவு யுவதி காரில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறுபேர் கைது!

கடந்த 17ஆம் திகதி முல்லைத்தீவு – குமுழமுனை பிரதேசத்தில் யுவதியொருவர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளம்பெண்ணை காரில் கடத்தி சென்ற இளைஞர் கும்பல் என்பது தெரியவந்ததையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி, கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மற்றும் உதவிய மூன்று இளைஞர்களை கைது செய்தனர்.

இந்நிலையில், கடத்தப்பட்ட இளம்பெண் தான் காதலித்த இளைஞனுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

இதன் பின்னர் யுவதியும் இளைஞனும் திருகோணமலையில் உள்ள விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த நிலையில் கடந்த 27ஆம் திகதி இருவரையும் பொலிஸார் கைது செய்ததுடன் இளைஞனின் தாய் மற்றும் சகோதரியையும் பொலிசார் கைது செய்தனர்.

அத்துடன், கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் 06 பேர் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களை நாளை (01) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் யுவதி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Previous articleபாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
Next articleநான்கு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட மாணவன்!