வவுனியாவில் கோதுமை மாவின் விலையில் தீ !

வவுனியாவில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்றைய கறுப்புச் சந்தையில் கோதுமை மா கிலோ ஒன்று 420 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதை அவதானிக்க முடிகிறது.

வவுனியாவில் வர்த்தக நிலையங்களில் கோதுமை மாவுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோதுமை மாவின் இறக்குமதி கணிசமாக குறைந்துள்ளது.

இறக்குமதியாளர்களிடமிருந்து விநியோகஸ்தர்களுக்கு கோதுமை மா வழங்கல் நிறுத்தப்பட்டதால், வர்த்தக நிலையங்களில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று கறுப்பு சந்தையில் ஒரு கிலோகிராம் கோதுமை மா 420 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.