இரவில் கைக்குழந்தையை வீதியில் விட்டுச் சென்ற நபர்… பொலிஸ் அதிகாரியின் நெகிழ்ச்சி செயல்!

பதுளையில் உள்ள சிறுவர் இல்லத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் சிசு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை அம்பேகொட சிறிசங்கபோ சிறுவர் இல்லத்தின் வாகன தரிப்பிடத்தில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் நிலையத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க பொலிஸ் உத்தியோகத்தர் முன்வந்தார், பின்னர் குழந்தையை தியத்தலா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிறுவர் இல்லத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, ​​இரவு நேரத்தில் ஒருவர் வந்து குழந்தையை விட்டுச் சென்றது அவதானிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleசே குவேராவின் இளைய மகன் திடீர் மரணம் : வெளியான காரணம்!
Next articleதந்தை பறித்த தேங்காய் தவறுதலாக மகனின் தலையில் விழுந்ததில் நடந்த சோகம்!