தந்தை பறித்த தேங்காய் தவறுதலாக மகனின் தலையில் விழுந்ததில் நடந்த சோகம்!

நமுனுகுல பிரதேசத்தில் தென்னை மரத்தில் ஏறிய மகனின் தலையில் தேங்காய் விழுந்ததில் தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் நமுனுகல – மியானாகந்துர பிரதேசத்தைச் சேர்ந்த 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனே உயிரிழந்துள்ளார்.

அதாவது நேற்று முன்தினம் (29-08-2022) மாலை 6.30 மணியளவில் தந்தை 50 அடி உயர தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்த போது, ​​வீட்டில் இருந்து வெளியே வந்த மகன் தலையில் தேங்காய் விழுந்துள்ளது.

இதனையடுத்து பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (31-08-2022) அதிகாலை மகன் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கவனக்குறைவாக தேங்காய் பறித்த குற்றச்சாட்டின் பேரில், மரணத்திற்கு காரணமான 55 வயதுடைய தந்தைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleஇரவில் கைக்குழந்தையை வீதியில் விட்டுச் சென்ற நபர்… பொலிஸ் அதிகாரியின் நெகிழ்ச்சி செயல்!
Next articleமுல்லைத்தீவில் விடுதலைப் புலிகள் காலத்து பாரிய எரிபொருள் தாங்கி மீட்பு!