முல்லைத்தீவில் விடுதலைப் புலிகள் காலத்து பாரிய எரிபொருள் தாங்கி மீட்பு!

நேற்று (31) முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மாவட்டம் 10 பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட பாரிய எரிபொருள் கொள்கலன் மீட்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பில் தனியார் காணியில் இருந்த எரிபொருள் தாங்கி நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதவான் ரி.சரவணராஜாவின் அனுமதியுடன் நேற்று (31) இந்த அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

16.3 அடி நீளமும் 7.9 அடி விட்டமும் கொண்ட வெற்று எரிபொருள் தாங்கி மீட்கப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மீட்கப்பட்ட எரிபொருள் தாங்கியை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லுமாறும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

Previous articleதந்தை பறித்த தேங்காய் தவறுதலாக மகனின் தலையில் விழுந்ததில் நடந்த சோகம்!
Next articleயாழ் – கொழும்பு தனியார் சொகுசு பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்!