யாழ் – கொழும்பு தனியார் சொகுசு பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்!

யாழ்ப்பாணம் சவுகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் வைரவர் கோவில் சந்தியில் தனியார் சொகுசு பஸ் மீது இனந்தெரியாத நபர்களால் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ9 வீதி ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த தனியார் சொகுசு பஸ் மீது இரவு 9.45 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பேருந்தின் ஓட்டுநர் சாவகச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்படி கல் வீச்சு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleமுல்லைத்தீவில் விடுதலைப் புலிகள் காலத்து பாரிய எரிபொருள் தாங்கி மீட்பு!
Next articleவவுனியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண் படுகாயம்!