யாழில் வீடொன்றில் பெண்ணை தாக்கி தங்க சங்கிளி பறித்து சென்ற கொள்ளையர்கள்!

யாழில் உறவினர் வீட்டுக்கு அந்தியோட்டி கிரிகைக்காக சென்ற பெண்ணை தாக்கி 5 பவுன் செயினை அறுத்து சென்ற திருடர்கள்.

குறித்த சம்பவம் நேற்று வட்டுக்கோட்டை இந்து கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் சிட்டக்கேணியில் உள்ள தனது உறவினர் வீட்டு வேலைக்காக பேருந்தில் சென்று கொண்டிருந்த நிலையில், பேருந்தில் இருந்து இறங்கி கிளை வீதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண்ணின் செயினை அறுத்து செல்ல முயன்றுள்ளனர்.

இதன் பின்னர் ஆடைகளை அவிழ்த்த பெண் ஒருவரை கையால் அறைந்த போது இருவரும் சேர்ந்து பெண்ணை கீழே தள்ளி செயினை அறுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleவவுனியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண் படுகாயம்!
Next articleயாழ் சாவகச்சேரி நீதிமன்றிலிருந்து தப்பியோடியவர்களால் பரபரப்பு!! ஒருவர் கைது!! மற்றவர் தலைமறைவு!!