யாழ் சாவகச்சேரி நீதிமன்றிலிருந்து தப்பியோடியவர்களால் பரபரப்பு!! ஒருவர் கைது!! மற்றவர் தலைமறைவு!!

சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்களில் இருவர் சிறைச்சாலை காவலர்களின் பிடியில் இருந்து தப்பிச் சென்றதுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றையவர் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்ல முற்பட்ட போது, ​​சிறைக்காவலர்களின் பிடியில் இருந்து சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதன் பின்னர் ஒருவர் கைது செய்யப்பட்ட போதும்,

மற்றுமொரு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous articleயாழில் வீடொன்றில் பெண்ணை தாக்கி தங்க சங்கிளி பறித்து சென்ற கொள்ளையர்கள்!
Next articleபிரபல கட்சி அலுவலகத்தில் மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் : விசாரணைகள் தீவிரம்!