`பணம், புகழ் எதுவும் இல்லாதபோதே என்னை நேசித்தவர்’- காதலியைக் கரம்பிடித்த `குக்கு வித் கோமாளி’ புகழ்!

இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோயிலில் புகழுக்கும் பென்சிக்கும் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

இவர் கோவையை சேர்ந்த பென்ஜியா என்பவரை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. பின்னர், அவரே தனது காதலியை தனது ‘பார்ட்னர்’ என்று சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் இன்று புகழுக்கும் பென்சிக்கும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது.

இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. பென்ஜியா முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரிடமும் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் கசிந்தது.

புகழின் ஆரம்ப காலத்திலிருந்தே பென்சி ஒன்றும் இல்லாத போது என்னை விரும்புவதாக பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் இன்று திருமணமாகி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு கைகோர்த்து பயணிக்கிறார்கள்.