இன்று எரிபொருள் விலையில் மாற்றம்.? கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள அறிவிப்பு!

எரிபொருள் விலையில் இன்றைய தினம் மாற்றம் மேற்கொள்ளப்படுமா என்பது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அதன்படி இன்று எரிபொருள் விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததாவது , ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது .

ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலையில் மாற்றத்தை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous article`பணம், புகழ் எதுவும் இல்லாதபோதே என்னை நேசித்தவர்’- காதலியைக் கரம்பிடித்த `குக்கு வித் கோமாளி’ புகழ்!
Next articleமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!