2 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய இலங்கை அணி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது.

இந்நிலையில் 184 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 60 ஓட்டங்களையும், தசுன் சானக 45 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் சமிக கருணாரத்னே 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரன் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Previous articleதந்தையை இரும்பால் தாக்கி கொலை செய்த மகன் !
Next articleஇன்று நள்ளிரவு நாட்டுக்கு வரும் கோட்டாபய ராஜபக்ச!