உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மனைவியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தவர் மீது துப்பாக்கி சூடு..!

உறவினரைப் பார்த்துவிட்டு மனைவியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபர் ஒருவர் தொடர்பில்லாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு மிதெனிய – சதோஸ்மாதகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அவர் தனது மனைவியுடன் உறவினர் வீட்டில் இருந்து வீடு திரும்பியபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த நபர் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிதெனிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Previous articleயாழ்.வடமராட்சி – தென்மராட்சி மக்களுக்கு விசேட அறிவிப்பு! அதிக கட்டண நிலுவை வைத்திருப்போரின் மின் இணைப்பு துண்டிப்பு! திகதியும் அறிவிப்பு..!
Next articleஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த 24 வயதான தாய்! ஒரு ஆண் குழந்தை, 3 பெண் குழந்தைகள்..!