திருகோணமலையில் வயோதிபரொருவர் கைது : வெளியான காரணம்!

திருகோணமலை – மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மான் இறைச்சியை வைத்திருந்த குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் குறித்த முதியவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொரவெவ – யாய இலக்கம் 06 பகுதியைச் சேர்ந்த ஹல்பவடகே சுமந்த பீரிஸ் (வயது 56) என்பவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரவெவ பிரதேசத்திற்கு பொறுப்பான விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த வயோதிபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மான் இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த 24 வயதான தாய்! ஒரு ஆண் குழந்தை, 3 பெண் குழந்தைகள்..!
Next articleஇளம் பெண் இன்னும் வேகத்தை கூட்டுமாறு கேட்டு வேகத்தை கூட்டிய முதியவர் மரணம். படுக்கறையறை பயங்கரம் !