நீர்வீழ்ச்சியில் விழுந்த இளம்பெண்களை காப்பாற்றும் முயற்சியில் முழுக்குடும்பமும் உயிரிழந்த பரிதாபம்!!

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 15 பேர் கொண்ட குடும்பம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராம்தாஹா நீர்வீழ்ச்சிக்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளனர்.

அப்போது, ​​ஷ்ரத்தா (14), ஸ்வேதா சிங் (22) ஆகியோர் செல்ஃபி எடுக்க தண்ணீருக்குள் சென்றபோது, ​​ஷ்ரத்தா நிலைதடுமாறி தண்ணீரில் விழுந்தார். உடனே, தண்ணீரில் விழுந்தவர்களை காப்பாற்ற அவர்களது சகோதரர் ஹிமான்ஷு சிங் (18), உறவினர் ரிஷப் சிங் (24), அவரது மனைவி சுலேகா சிங் (22) ஆகியோர் தண்ணீரில் குதித்தனர்.

அவர்களைத் தொடர்ந்து சகோதரர்கள் அபய் சிங் (22), ரத்னேஷ் சிங் (26) ஆகியோரும் தண்ணீரில் குதித்தனர்.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர் மற்றும் மீட்பு குழுவினர் நீரில் மூழ்கியவர்களை மீட்க விரைந்தனர்.

ஆனால், அன்று மூன்று உடல்களை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது. சுலேகா மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுற்றுலாத் தலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், செல்ஃபி மோகத்தால் பலர் உயிரிழப்பது தொடர்ந்து கவலையளிக்கிறது.