யாழில் சமுர்த்தி உத்தியோகஸ்த்தரின் வீடு உடைத்துக் கொள்ளை!

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வீடொன்றை உடைத்து சுமார் 8 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுழிபுரம் பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் நேற்று கடமை முடிந்து திரும்பி வந்த போது வீட்டில் இருந்த 8 தங்க பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளது.

நேற்று மாலை இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புகாரின் பேரில் தலைமை ஆய்வாளர் நிக்கோலஸ் பிரான்சிஸ் தலைமையில் விசாரணை நடைபெற்றது

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் காரைநகரைச் சேர்ந்த இருவரை இன்று கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து ஏழரை பவுண் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

Previous articleஇன்று தொடக்கம் 5ம் திகதி வரையான மின்வெட்டு அட்டவணை வெளியானது!
Next article22 ஆண்டுக்கு பின்பு தாய், சகோதரியை கண்டுபிடித்த மகன்: மொழி தெரியாததால் பேச முடியாத பரிதாபம்!