கிளிநொச்சியில் உறக்கத்தில் இருந்த கணவருக்கு மனைவியால் நேர்ந்த கதி; இருவரும் மருத்துவமனையில்!

கிளிநொச்சி பளை பிரதேசத்தில் உறங்கிக் கொண்டிருந்த கணவனை மனைவி கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூலோப்பளை பகுதியில் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாலையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கணவரை மனைவி தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மனைவியும் மன உளைச்சலுக்கு உள்ளாகலாம் என சந்தேகிக்கப்படுவதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleதிடீரென அதிகரித்த முட்டையின் விலை ! ஆட்சியில் இல்லை என்றாலும் திருவிளையாடல் தொடர்கிறது!
Next articleநல்லிரவு நாட்டிற்கு வந்த கோட்டாவுக்கு  இவ்வளவு பாதுகாப்பா!